திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பழங்குடியின மற்றும் மலைவாழ்மக்களின் நிலங்கள், சட்ட விதிமுறைகளை மீறி வெளி ஆட்களுக்குவிற்பனை செய்யப்படுவதாகக் கூறி, தங்களது நில உரிமை பறிக்கப்படுவதாகமலைவாழ் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மலையில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை, மலைவாழ் அல்லாதவெளி நபர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற சட்ட விதிமுறைகள்நடைமுறையில் உள்ளன.
ஆனால், முறையான ஆதாரங்கள் மற்றும் சரிபார்ப்புகள் இல்லாமல், அரசுத்துறை மூலமாகவே இத்தகைய நிலப் பதிவுகள் (கிரையம்) தடையின்றிநடப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக ஏலகிரி மலை கிராம மக்கள், திருப்பத்தூர் மாவட்டஆட்சியரை நேரில் சந்தித்து, "சட்டம் இருக்கும்போது அரசு எப்படி வெளிநபர்களுக்கு நிலங்களை பதிவு செய்து கொடுக்கிறது?" என கேள்வி எழுப்பிதங்களது வாழ்வாதாரத்தை காக்கப் போராடி வருகின்றனர்.
ஏலகிரி மலை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத்திகழ்வதால், அங்கு தங்கும் விடுதிகள் (Resorts), பண்ணை வீடுகள் (Farm houses) மற்றும் சொகுசு பங்களாக்கள் கட்டுவதற்காக வெளி மாவட்ட மற்றும்வெளி மாநில நபர்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
நிலங்கள் பெரிய அளவில் 'சென்ட்' கணக்கில் வணிகம் செய்யப்படுவதால், பெரும் பணம் படைத்த வெளி நபர்கள் மட்டுமே நிலங்களை வாங்கமுடிகிறது. இதனால், நடுத்தர மற்றும் உள்ளூர் ஏழை எளிய மக்கள் வீட்டுமனைகள் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
உள்ளூர் மக்களின் கோரிக்கைகள் :
தலைமுறை தலைமுறையாகத் தாங்கள் விவசாயம் செய்து வரும் அனுபவநிலங்களுக்கு, தங்களுக்குச் சாதகமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்என்று ஏலகிரி மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் அரசியல் இயக்கங்கள்தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
விதிமீறி நடக்கும், ரியல் எஸ்டேட் விற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நில உரிமைகளைப்பாதுகாக்க அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய காரணத்திற்காக போராடிய நபர் மீதுவழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
ஏலகிரி பழங்குடி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்றவேண்டும்.
ஏலகிரி மலைப் பகுதியில் ரியல் எஸ்டேட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்