கோவில்பட்டியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு....

கோவில்பட்டியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு....

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான இளையோர் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு நடந்தது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன், செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில பொதுச் செயலாளர் மனோகர் உள்ளிட்ட மாநில அளவிலான கருத்தாளர்கள் கலந்து கொண்டு வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்து பேசினர்.

மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட அஸ்ட்ரோ கிளப்களுக்கு அஸ்ட்ரோ விருதுகளை ரோட்டரி  மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு வழங்கி பேசினார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வம், சீனிவாசன், கண்ணன்,ராஜ்குமார், ரவிமாணிக்கம், கிருஷ்ணசாமி, மணிகன்டன், மாரியப்பன், சுப்பிரமணியன் மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநிலச் செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.

கல்லூரி வளாகத்தில் 60க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

Bahujan Louis

District Reporter - Thoothukudi

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy