தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் நாற்பத்தி ஒன்றாவது நிகழ்வு நடைபெற்றது.

தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் நாற்பத்தி ஒன்றாவது நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி இரயில் நிலையம் அருகில் உள்ள ஆயர் இல்ல இளையோர் அரங்கில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் நாற்பத்தி ஒன்றாவது நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் நெல்லை தேவன் வரவேற்றுப் பேசினர். பணிநிறைவு ஆசிரியர் ஞா. அல்பர்ட் தலைமை வகித்து தலைமை உரை வழங்கினார்.

வ. உ. சி. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆரோக்கிய செல்வ சுந்தரி "நட்பின் அவசியம்" என்ற தலைப்பிலும், பெருங்குளம் எழுத்தாளர் முனைவர் கே. ஆர். பி. மணிமொழிச் செல்வன் "கல்வியின் மாண்பு" என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர்.

நெடுஞ்சாலைத்துறை பணி நிறைவு கவிஞர் தா. செல்வராஜ் "புத்தக தானம் கொடுத்திடுங்கள்" என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

புலவர் சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி நிறைவில் கருவூலத்துறை பணிநிறைவு எம். எஸ். செய்யது முஹம்மது ஷெரிப் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வங்கிப் பணியாளர் திருமலைப்பிரபு, மா. கண்ணன், எழுத்தாளர் சாந்தி பிரபு, பணிநிறைவு ஆசிரியர்கள் பிரபாவதி, சேவியர் மெத்தோடியஸ், ஆசிரியர் வள்ளிநாயகி, கலையின் குரல் சக்திவேல், ஒளிஓவியர் ரவி, காயத்திரி, பத்மநாதன், முத்துராம்சரண் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Bahujan Louis

District Reporter - Thoothukudi

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy