தமிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டது மக்களிடத்தில்அம்பலமானவுடன் அதை மூடி மறைப்பதற்கு பல்வேறு வித்தைகளை காட்டிவருகிறது.
ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் சபாநாயகருக்கு எதிரானதீர்மானத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக கூறப்படும்குற்றச்சாட்டில்

புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன், நேற்றைய நாள்நள்ளிரவில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.
நள்ளிரவில் விசாரணை என்பது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். எனினும் இன்றும் காலை மீண்டும் விஜயன் அழைக்கப்பட்டு தற்போது வரைஅவர் காவல் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் தான்விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக அரசு தன்னுடைய தவறுகளை மூடி மறைக்கதொடர்ந்து பல்வேறு சதி புகார்களை உருவாக்கி அதன் மூலம் பலரை கைதுசெய்து தன் மீது கழிவிரக்கத்தை உருவாக்க வேண்டும் என்றுசெயல்படுவதை அறிய முடிகிறது.
தனக்கு வேண்டாதவர்கள் மீது பல்வேறு வழக்குகளை போட்டு கைதுசெய்வதில் ஜெயலலிதாவை மிஞ்சக் கூடிய வகையில் விஜயின்செயல்பாடுகள் இருக்கின்றன.
ஊடகவியலாளர் விஜயன் சட்ட விரோதமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுசட்டவிரோதமாக போலீசால் தடுத்து வைக்கப்பட்டதை மக்கள் அதிகாரக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன் ,
மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,