கும்மிடிபூண்டியில் மீண்டும் தொழிற்சாலை விபத்து : தொடரும் தொழிலாளர்களின் பலி! ஆலை நிர்வாகமும், அரசுமே குற்றவாளி!- மக்கள் அதிகாரக் கழகம்

கும்மிடிபூண்டியில் மீண்டும் தொழிற்சாலை  விபத்து : தொடரும் தொழிலாளர்களின்  பலி!  ஆலை நிர்வாகமும், அரசுமே குற்றவாளி!- மக்கள் அதிகாரக் கழகம்

இறால் தொழிற்சாலையில் அமோனியா விஷவாயு கசிவினால்  18  தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவத்தின்  பதட்டம் அடங்குவதற்குள், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜெயின்மெட்டல் காப்பர் ( Jain Resource Recycling Ltd) தொழிற்சாலையில்மற்றொரு கொடூர விபத்து நேர்ந்துள்ளது.


 

ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங் நிறுவனம், தாமிரம், அலுமினியம் மற்றும்ஈயம் போன்ற கழிவுப் பொருட்களை வைத்து வாகன, மின்சார மற்றும்கட்டுமானத் தொழில்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாக மாற்றி, இரும்பு அல்லாத உலோகப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.


 

நேற்று முன்தினம் அதிகாலை (14.07.2026) சுமார் 5.30 மணியளவில், காப்பர் உற்பத்திப் பணியில் தொழிலாளர்கள் வழக்கம்போல்ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பர்னஸ் (உலை) ஒன்று பயங்கர சத்தத்துடன்வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வடமாநில தொழிலாளியான பீகாரைச்சேர்ந்த ரவி ரஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாகஉயிரிழந்தார்.


 

மேலும், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பூசன் குமார், ஓம் குமார், ரஞ்சித் குமார், ராஜா பாபு, ரன்வீர் குமார், பிரின்ஸ் குமார் உட்பட 9 வடமாநில இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டுகும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனை, வெங்கடேஸ்வராமருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை ஆகியவற்றில் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

இரும்பு மற்றும் காப்பர் உற்பத்தி தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள்ஏற்படுகிறது. ஒவ்வொரு விபத்திலும் சுமார் பத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.


 

எனவே, தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் நேரில்ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாகமக்களும் தொழிற்சங்கங்களும் கோரிக்கைகளை முன் வைத்துவருகின்றனர்.

 


 

மேலும், இப்பகுதி மக்கள் பழைய பேட்டரி மற்றும் வயர்களை உருக்கும்போதுவெளியாகும் கரும்புகையால் தாங்கள்  மூச்சுத்திணறலால்அவதிப்படுவதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதனைத் தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தொடர்ச்சியாக  வலியுறுத்திவருகின்றனர்.


 

இப்படி தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளைமுன்வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் விபத்துகள் நடப்பதும், மக்கள் பாதிக்கப்படுவதும், தொழிலாளிகள் தொடர்ச்சியாக இறப்பதும் வலிமிகுந்த தொடர் கதையாக மாறியுள்ளது.


 

பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் நிவாரணங்கள் வழங்குவதே அரசின்அதிகபட்ச நடவடிக்கையாக தொடர்கிறது, அல்லது கீழ்நிலைகண்காணிப்பாளர்களை தண்டிப்பது என்பதுடன் நடவடிக்கைகள்முடங்கிவிடுகிறது.


 

சுமார் 5 வருடங்களாக இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலையில் மூன்றுஷிப்டுகளில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.


 

விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி  போலீசார்  விசாரணை நடத்திவருகின்றனர். என்றாலும் இப்பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகள்முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்படுவதாகக்குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.


 

தற்போது விபத்து நடந்துள்ள நிறுவனத்தின் உரிமையாளரிடம் கடந்த மாதம்11-ஆம் தேதியே முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லைஎன விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தான் இந்தஆலை தொடர்ச்சியாக இயக்கப்பட்டிருக்கிறது.


 

ஆகவே விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தும் நிறுவனத்தைஅலட்சியமாக கையாண்ட அரசும்,  பாதுகாப்பு விதிமுறைகள்பின்பற்றப்படாமலும், குறிப்பாக  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்த பின்பும்விதியை மீறி ஆலையை இயக்கிய ஆலை நிர்வாகமுமே முதன்மையானகுற்றவாளி.


 

எனவே தமிழ்நாடு அரசு,


 

இந்த ஆலையை சீல் வைப்பதுடன் இதை கண்காணிக்க தவறிய  நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும்  ஒட்டுமொத்த தொழிலாளர் நலத்துறைசார்ந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

உயிரிழந்த தொழிலாளி ரவி ரஞ்சன் அவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடுவழங்கி அதை உறுதிப்படுத்திட வேண்டும்.


 

பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன்அவர்களுக்கான மொத்த மருத்துவ செலவையும் வாழ்வாதாரத்திற்கானதேவைகளையும்  ஜெய்சன் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் உறுதிப்படுத்திடவேண்டும்.


 

உயிராபத்து விளைவிக்கும் இரசாயனங்களைக் கையாளும்தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக்கடைப்பிடிக்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்புக் குழுக்கள்அமைத்து உத்தரவாதப்படுத்த வேண்டும். அதனை பொதுமக்களுக்குவெளியிட வேண்டும்.


 

புலம்பெயர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புதிட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்


 

கும்மிடிபூண்டியை சுற்றி இரும்பு மற்றும் காப்பர் தொழிற்சாலைகளில்மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்  உடனடியாக ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களின்உரிமைகளை ரத்து செய்வதுடன் அதை கண்காணிக்க தவறியஅதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்.

என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.


 

மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், தொடர்ச்சியாகஅரங்கேறும் தொழிற்சாலை விபத்துகளையும், தொழிலாளர்கள்பலியிடப்படுவதையும் தடுத்து நிறுத்திட இந்த நச்சு ஆலைகளால் வாழ்வாதாரபாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பகுதி வாழ் மக்களையும், பாதுகாப்பற்றநிலையில் பணிபுரியும் தொழிலாளிகளையும் ஒருங்கிணைத்தபோராட்டங்களை தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் வலுவாகமுன்னெடுத்திட வேண்டும்.


 

ஆகாஷ்

மக்கள் அதிகாரக் கழகம்

சென்னை மாவட்டம்

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy