புதுக்கோட்டையில் பேருந்து வழித் தடத்தை நீட்டித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் பேருந்து வழித் தடத்தை நீட்டித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் இலுப்ப குடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி நிறைவேற்றிடும் வகையில், 

பரம்பூர் முதல் கீரனூர் வரை செல்லும் பேருந்து வசதியை குடுமியான்மலை, கீழக்குறிச்சி, இலுப்பை குடிப்பட்டி தாயினிப்பட்டி வரை நீட்டித்து மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் இன்று 03/07/2026 கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

e42e5e68-901d-4166-b965-0de32e0a3fdb.webp

இந்நிகழ்ச்சியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங், புதுக்கோட்டை மண்டல மேலாளர் முகமது நாசர், துணை மேலாளர் (வணிகம்) கார்த்திகேயன், இலுப்பூர் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy