வைகையில் கை வைப்பதா ஆளுநர் ?

மதுரைக்கு ஒரு தனியார் கல்லூரி நகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடுஆளுநர் அர்லேகர் முன்னாள் ஆளுநர் ஆர் . என் . ரவியை தொடர்ந்து மீண்டும்வேலையைக் காட்ட ஒன்றிய பாஜக அரசு தயாராகி விட்டது என்பதற்குஅடையாளமாக மதுரைக் கலெக்டர் போலீஸ் கமிஷனர் உடன் ஆளுநர்அதிகார வரம்பை மீறி ஆய்வுக் கூட்டம் நடத்துவதா ? மேலும் ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது , அதைத்தொடர்ந்து தேசிய கீதமும் இறுதியாக தமிழ்த் தாய் வாழ்த்துபாடப்பட்டது , தமிழை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பின்னுக்குத் தள்ளிபுறக்கணிப்பதை தவெக வேடிக்கை பார்ப்பதை வன்மையாக தவெக அரசைகண்டிக்கிறேன் , தொடர்ந்து ஆளுநர் பேசுகையில் மதுரை வைகை ஆற்றைபார்த்து ஆச்சிரியப்பட்டேன் வைகை ஆற்றினை தமிழ்நாடு அரசுசீரமைக்கவில்லை எனில் ஆளுநர் மாளிகையே களமிறங்கும் என்றுபேசுவது மாநில உரிமைகளை பறிப்பதாகும் ஆளுநரின் இந்த அசட்டுத்துணிச்சலுக்கு தவெக அரசின் கையாளாகாத்தனமே காரணமாகும்முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில்ஈடுபட்ட போது அவர் சென்ற இடங்களில் எல்லாம் திமுக , அதிமமுக உள்ளிட்டபல்வேறு முற்போக்கு இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புதெரிவித்தோம் கடந்த திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு . க . ஸ்டாலின்ஆட்சிக் காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை திமுக அனுமதித்துஇல்லை , வைகை ஆற்றின் மீது பரிதாபப்படும் ஆளுநர் மேகதாது அணைப்பிரச்சினையில் அக்கறை காட்டாதது ஏன் ? மேட்டூர் அணை , காவிரி டெல்டாபகுதிகளில் விவசாயிகளுக்கு ஜூன் 12 ல் தண்ணீர் திறந்து விட்டு இருக்கவேண்டும் இதில் முனைப்புக் காட்டாத கவர்னர் முல்லைப் பெரியார் , பாலாறுபோன்ற தமிழ்நாட்டு மக்களின் ஜீவாதார பிரச்சனைகளில் முனைப்புக்காட்டாத கவர்னர் மீனவர்கள் , விவசாயிகள் மற்றும் மாணவர்களின் நீட்பிரச்சனையில் கவனம் செலுத்தாத கவர்னர் தமிழக அரசு மௌனமாகஇருப்பதால் மாநில உரிமைகளை கவர்னர் மூலம் ஒன்றிய பாஜக அரசு தட்டிப்பறிப்பதா ? மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் அவர்கள்மாநில உரிமைகளை தாரை வார்ப்பதா ஆளுநர் ஆய்வு செய்யும்நடைமுறையை உடனே தவெக அரசு நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் , மீறி தொடர்ந்து ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் ஆளுநருக்குஎதிராக அதிமமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என ஆளுநருக்குஎச்சாரிகையாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் சே . பசும்பொன்பாண்டியன்