விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் இன்று (01.07.2026) வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற “இளம் பேரிடர்நண்பன்”- தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை (Yuva Aapda Mitra Volunteers Training) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த உறைவிட பயிற்சி வகுப்பானது, விருதுநகர் செந்திகுமார நாடார்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள்கல்லூரி (தன்னாட்சி) ஆகிய கல்லூரிகளில் 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெறுகிறது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அரசின் மீட்புப் படையினர் வருவதற்குமுன்பாக, உள்ளூர் மக்களும் இளைஞர்களுமே முதல் மீட்பர்களாகச் (First Responders) செயல்படுகின்றனர். பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதத்தைக்குறைக்கவும், துரிதமாகச் செயல்படவும் இதுபோன்ற பயிற்சிகள் பெரிதும்உதவும். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் “இளம்பேரிடர் நண்பன்” என்ற தலைப்பில் NCC, NSS. My Bharath தன்னார்வலர்களுக்கு ஒரு வார காலம் உறைவிட பயிற்சி நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் மாவட்டமாக விருதுநகர்மாவட்டத்தில் இந்த உறைவிட பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டு01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெறுகிறது.
விருதுநகரில் நடைபெற்று வரும் இப்பயிற்சி வகுப்பில் 102 ஆண்கள் மற்றும்74 பெண்கள் என மொத்தம் 176 தன்னார்வலர்களும், சிவகாசியில் 146 ஆண்கள் மற்றும் 54 பெண்கள் என மொத்தம் 200 தன்னார்வலர்களும் எனஆக மொத்தம் 376 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில், பெருவெள்ளம், புயல், நிலநடுக்கம் மற்றும் தீவிபத்து போன்ற அவசரக் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதுகுறித்த செயல்முறை விளக்கங்கள் குறித்தும், காயமடைந்தவர்களுக்குஅடிப்படை முதலுதவி (First Aid) மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும்போதுசி.பி.ஆர் (CPR) சிகிச்சை அளிக்கும் முறைகள் கற்றுத்தரப்படுகின்றன.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை(SDRF) மற்றும் இந்தியச் செஞ்சிலுவை சங்க (Red Cross) வல்லுநர்களைக்கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. மீட்புப் பணிகளுக்கான கயிறுகள்கட்டுதல், மிதவைகளை உருவாக்குதல் மற்றும் எச்சரிக்கை தகவல் தொடர்புசாதனங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் குறித்தும் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
எனவே, இளம் பேரிடர் நண்பர்களாகப் பயிற்சி பெறும் நீங்கள், முழுஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு உங்கள் பகுதிகளில் பேரிடர் காலங்களில்பொதுமக்களுக்கு உறுதுணையாகவும், இந்த பயிற்சி குறித்தவிழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வல்லுநர் (தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், சென்னை) டாக்டர்.முருகானந், வட்டாட்சியர் திரு.ராஜாமணி, கல்லூரி முதல்வர்முனைவர் சாரதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பயிற்றுநர்கள்மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.