தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 1762/20.04.1987-ன்படி தகுதிபெற்றிருந்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டுள்ளமுஸ்லிம் சிறைவாசிகளின் நிலை, மனிதநேயக் கண்ணோட்டத்துடன்அணுகப்பட வேண்டிய ஒன்றாகும்.
பரோல் கால நன்னடத்தை: கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின்கருணையால் பரோலில் வெளிவந்திருந்த 15 சிறைவாசிகள், தங்களின்குடும்பத்தாரோடு இணைந்து, சட்டத்தை முழுமையாக மதித்து, எவ்விதபுகாருக்கும் இடமளிக்காமல் நல்வாழ்வு வாழ்ந்துகாட்டியுள்ளனர்.நன்னடத்தையை நிரூபித்த பிறகும், கடந்த 17.11.2025 அன்று அவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பது அவர்களின்குடும்பத்தினரை, குறிப்பாகப் பிள்ளைகளையும் மனைவியையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.தண்டனையின் நோக்கம் ஒருவரைப்பழிவாங்குவதா அல்லது மனமாற்றம் அடையச் செய்வதா? இரண்டுஆண்டுகள் பரோலில் அமைதியாக வாழ்ந்து, தாங்கள் திருந்திவிட்டதைநிரூபித்த பிறகும், அவர்களை மீண்டும் இருண்ட சிறைக்குள் தள்ளுவதுஎந்த வகை நீதி? 25 ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளில்பாதிக்கும் மேலானது அல்லவா?மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சிறையில் வாடும் எஞ்சிய 22 முஸ்லிம் சிறைவாசிகளையும் கருணைஅடிப்படையில் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும். அந்த இறுதிஉத்தரவு வரும் வரை, அவர்களின் பரோல் காலத்தை நீட்டித்து உத்தரவிடவேண்டும்.மாநிலத்தின் எதிர்காலத்தைக் சீரழிக்கும் போதைப்பொருள்புழக்கத்தைத் தடுப்பதில் அரசு காட்டும் தீவிரத்தை மேலும் வலுப்படுத்தவேண்டும்.பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், கிராமப்புறஇளைஞர்களிடமும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஒருமக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சமரசமற்ற கடுமையானசட்ட நடவடிக்கைகள் பாய வேண்டும்.சமூக நீதியையும், மனிதநேயத்தையும்தன் இரு கண்களாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, 'வார்டுமறுவரையறையில் முறையான பிரதிநிதித்துவத்தையும்', 'நீண்டகாலசிறைவாசிகள் விஷயத்தில் மனிதநேய விடுதலையையும்' வழங்கி, தமிழகமக்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டும் எனப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். என

அகில இந்திய புரட்சித் தளபதி விஜய் சிந்தனையாளர் மன்ற மாநிலதலைவரும், டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தினர் நடத்தும் ஏபிஜே கலாம்உலகளாவிய அறக்கட்டளை தேசிய துணை பொதுச்செயலாளருமானமுனைவர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி சட்ட அமைச்சர் நிர்மல்குமாரைதிருச்சியில் சந்தித்து மனு அளித்தார்