ஊழல் நாளுக்கு நாள் வளர்ந்து பேருருவம் எடுத்திருப்பதுகவலையளிக்கின்றது. அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள், செவ்வாக்குமிக்க ஆளுமைகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நம்முடைய நாட்டில்அரசாட்சி, ஒழுக்கம், தார்மீகம் ஆகிய அவைத்தும் மிகப் பெரும்நெருக்கடியைச் சந்தித்து நிற்பதையே உணர்த்துகின்றன- ஜமாஅத்தேஇஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மெளலவி : முஹம்மத் ஹனீஃபாமன்பயீ
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..
ஊழல் நாளுக்கு நாள் வளர்ந்து பேருருவம் எடுத்திருப்பதுகவலையளிக்கின்றது. அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள், செவ்வாக்குமிக்க ஆளுமைகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நம்முடைய நாட்டில்அரசாட்சி, ஒழுக்கம், தார்மீகம் ஆகிய அவைத்தும் மிகப் பெரும்நெருக்கடியைச் சந்தித்து நிற்பதையே உணர்த்துகின்றன.நம்முடையதனிப்பட்ட வாழ்வையும் பொது வாழ்வையும் வழிகாட்டி, நெறிப்படுத்துகிறகொள்கைகளாய் நேர்மை, வாய்மை, உண்மை. பதில் சொல்லும் பொறுப்புஉணர்வு.இறையச்சம் ஆகிய உன்னதக் கோட்பாடுகள் அமைந்தால்தான்பொது வாழ்வைத் தூய்மைப்படுத்த முடியும்.
புலனாய்வுக்கான ஏஜென்சிகளையும், அமலாக்கத்துறை ஏஜென்சிகளையும்அரசிய எதிரிகள் மீது பிரயோகிப்பதும், அதிலும் குறிப்பாக அரசியல் ரீதியானகொந்தளிப்பான காலகட்டங்களில் இவற்றைச் செய்வதும் மிகுந்தகவலையளிக்கின்றன.
பொது மக்கள் மத்தியிலும் பொது தளங்களிலும் கருத்துக்களைஎடுத்துரைக்கிள் சந்தர்ப்பங்களில் பேச்சின் தரமும் உரையின் கண்ணியமும்வெகுவாகத் தாழ்ந்து வருவது கவலையளிக்கின்ற போக்கு ஆகும்.
அறிவார்ந்த உரையாடலும், கருத்தார்ந்த விவாதங்களும் வெகுவேகமாககாணாமல் போய் கொண்டிருக்கின்றன.
தனிமனிதத் தாக்குதல்களும், வெறுப்புப் பேச்சும், அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், சிவில் சமூக அமைப்புகள்ஆகியோரின் மானத்தையும் கண்ணியத்தையும் சுக்குநூறாகஉடைத்தெறிகின்ற வகையிலான சொல்லாடல்களும் அணிதிரட்டுகின்றபோக்கும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையில் நம்முடைய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பேணிநடக்கின்ற போக்கையும், ஜனநாயக மாண்புகளையும், சட்டத்தின்ஆட்சியையும் மேற்கொள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் அமைப்புச் சட்டப்பூர்வம அதிகாரிகளுக்கும், பொதுநிறுவனங்களுக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அழைப்பு விடுக்கிறது.
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைவழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைவழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மாநில அரசின் தரப்பில் ஏற்பட்டஅலட்சியங்களே இந்நிலைக்குக் காரணம் என்ற உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்திருக்கிறது. அதேவேளையில், இவ்வழக்கில்குற்றச்சாட்டை அரசு சுயபரிசோதனை செய்து, உச்சநீதிமன்றத்தில்உறுதியான சட்டவாதங்களை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. வரலாற்று ரீதியாக சமூக, கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைஉறுதி செய்யும் அரசமைப்புச்சட்ட வழிமுறையாகும். ஒருவர் மதம் மாறுவதால்மட்டும் அவரது பின்தங்கிய நிலை ஒரே நாளில் மாறிவிடாது. மதம்மாறுவோருக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது சமூகநீதி சார்ந்தஉரிமைகளை மறுப்பதாகும்.
பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்விநிறுவனங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த 717 டாஸ்மாக் சாராயக்கடைகளை அதிரடியாக மூட உத்தரவிட்டது வரவேற்கத்தக்கதாகும்.
அதே சமயம் இவ்வாறு மூடப்பட்ட கடைகள் வேறு வகையில் அருகில்இருக்கின்ற சந்துகளிலும் பொந்துகளிலும் முளைக்க அனுமதிக்கக்கூடாதுஎன்பதிலும் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்க வேண்டும்.
மது, போதை பழக்கங்களுக்கு எதிராக தமிழ்நாடு எங்கும் தொடர் பரப்புரைமேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின்போதுஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு புதுச்சேரி பொதுச்செயலாளர்அஜிஸ் லுத்துபுல்லாஹ்,மாநில ஊடகச்செயலாளர் சாகுல் ஹமீது ...உள்ளிட்டநிர்வாகிகள் உடனிருந்தனர்.