
சென்னை ஏ.எம்.எஸ். பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு மையம் (Research & Development Cell) சார்பில் "ஆராய்ச்சிமுறை (Research Methodology), கற்பித்தல் அணுகுமுறை (Teaching Pedagogy) மற்றும் நிதி உதவித் திட்டங்கள் (Funding Opportunities)" என்றதலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் (Faculty Development Programme - FDP) இன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி(College of Engineering, Guindy), உற்பத்திப் பொறியியல் துறைபேராசிரியரும், ஆராய்ச்சி மைய (Centre for Research) இயக்குநருமானபேராசிரியர் டாக்டர் மு. காந்த பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்.
தனது உரையில், தற்போதைய உலகளாவிய கல்விச் சூழலுக்கு ஏற்பசெயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பங்களைகற்பித்தல் முறைகளில் ஒருங்கிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் தங்களது பாட அறிவு, ஆராய்ச்சிதிறன் மற்றும் தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்த அறிவை தொடர்ந்துபுதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தரமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுதல், தொழில்துறையுடன்இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், மாணவர்களை ஆராய்ச்சிமனப்பான்மையுடன் உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும்எடுத்துரைத்தார். குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆராய்ச்சிநிதி உதவித் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி, எந்தெந்த அமைப்புகள்மூலம் நிதி பெறலாம், ஆராய்ச்சி முன்மொழிவுகளை (Project Proposal) எவ்வாறு தயாரிப்பது, விண்ணப்பிக்கும் நடைமுறைகள், திட்ட அறிக்கைகள்தயாரிக்கும் முறை, தகுதி நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைவிளக்கினார். ஒவ்வொரு பொறியியல் கல்லூரியும் இத்தகைய நிதி உதவித்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் புதுமைகளைமேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இப்பயிற்சி முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 100-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கே.ஜி. பார்த்திபன் தலைமை வகித்து, ஆசிரியர்கள்ஆய்வு சார்ந்த கற்பித்தல், தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில்முறைமேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பேராசிரியர் அ.சு. சல்மா பானு கலந்துகொண்டு, ஆசிரியர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில்கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மேற்கொண்டுள்ள இந்தமுயற்சியை பாராட்டினார்.
இந்த ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாமை தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் டாக்டர் லாவண்யா மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொடர்புப்பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி ராஜேஸ்வரி ஆகியோர்சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.